×

குளித்தலை காவிரி ஆற்றுப்படுகை தைல மரக்காட்டில் திடீர் தீ

குளித்தலை, பிப். 22: கரூர் மாவட்டம் குளித்தலை தேசிய நெடுஞ்சாலை அருகே காவிரி ஆற்று படுகையில் வனத்துறைக்கு சொந்தமான தைல மரக்காடு உள்ளது. இப்பகுதிகளில் அடிக்கடி இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு செல்வதும், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்து விட்டு செல்வதும் வழக்கமாக உள்ளது. கடந்த 2 நாட்கள் முன்னர் இந்த தைல மரக்காட்டில் தீ பிடித்து அங்கு தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்து விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு, அதேபோல தைல மரக்காட்டில் தீ பிடித்து பரவலாக மளமளவென தீ பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதை அவ்வழியே சென்றவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். வனத்துறை மூலம் அங்கு வந்த முசிறி தீயணைப்பு துறையினர் மற்றும் அங்கிருந்த இளைஞர்கள் உதவியுடன் தீ பற்றி எரிந்து முன்னேறி வருவதை பச்சை மரக் கிளைகளை கொண்டு எரியும் தீ மீது தட்டி, மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags :
× RELATED தென்னிலை அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது