×

பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்

பள்ளிபாளையம், பிப்.21: கூலிஉயர்வு ஒப்பந்தம் காலாவதியாகி 2 வருடமாகியும் புதிய ஒப்பந்தம் மூலம் கூலி உயர்வு வழங்கப்படாததை கண்டித்து பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் பகுதியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தி புதிய கூலி உயர்வு வழங்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும். முந்தைய ஒப்பந்தம் காலாவதியாகி 2 வருடங்களை கடந்த பின்னரும் புதிய ஒப்பந்தம் போடவில்லை. இது குறித்து மாவட்ட சிஐடியூ விசைத்தறி தொழிற்சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு, வரும் 27ம்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தின் அவசியத்தை விளக்கி பள்ளிபாளையம் அதன் சுற்றுப்பகுதியில் மாலை வேலையில் ஆர்ப்பாட்டம், தர்ணா போராட்டங்களில் தொழிலார்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்டில் கூலி உயர்வு உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட தலைவர் மோகன், சிஐடியு சங்க மாவட்ட செயலாளர், வேலுச்சாமி, சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் ரவி, விசைத்தறி சங்க பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், விசைத்தறி சங்க ஒன்றிய குழு நிர்வாகிகள் குமார், ஜெயபால், முருகேசன், அருள்மணி, மற்றும் வர்த்த வெகுஜன அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள், விசைத்தறி தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags : Pallipalayam ,power loom workers ,
× RELATED அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி