அங்கன்வாடி மையத்தை இடமாற்ற எதிர்த்து மனு

நாமக்கல், பிப். 21: நாமக்கல் அருகே முத்துகாப்பட்டி ஊராட்சி, மேதரமாதேவி கிராமத்தை சேர்ந்த பெண்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்த கோரிக்கை மனு விபரம்: முத்துகாப்பட்டி அருகே மேதரமாதேவி கிராமத்தில், மாரியம்மன் கோயில் அருகே, அங்கன்வாடி மையம் 40 ஆண்டாக செயல்பட்டு வருகிறது. இந்த மையம் மேதரமாதேவி கிராமத்தின் மையப்பகுதியில் உள்ளதால், குழந்தைகள் எளிதில் வந்து செல்ல முடியும். பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து வர வசதியாக அமைந்து உள்ளது. தற்போது இந்த மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மயானத்துக்கு செல்லும் வழியில் மையம் உள்ளதால், குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. எனவே, தற்போது செயல்படும் இடத்தில் குழந்தைகள் நலனுக்கான வசதிகளுடன் மையத்தை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: