×

மல்லிகார்ஜூன கோயிலில் தேர்த்திருவிழா கோலாகலம்

ஓசூர், பிப்.21: ஓசூர் அருகே எஸ்.முதுகானப்பள்ளியில் உள்ள மல்லிகார்ஜூன கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி தேர்த்திருவிழா நடந்தது.  ஓசூர் அருகே எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அம்ருதா மல்லிகார்ஜூன சுவாமி கோயில் உள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து 600 ஆண்டுகளுக்கு முன் சுவாமியின் திருமண் கொண்டு வரப்பட்டு, இங்கு கோயிலானது பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று, மல்லிகார்ஜூன சுவாமி கோயில் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு  கோயிலில் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக மல்லிகார்ஜூன சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட வண்ண தேரில் சுவாமி அமர வைக்கப்பட்டு தேர் இழுக்கப்பட்டது.

இதில் எஸ்.முதுகானப்பள்ளி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். கிராமத்தின் பல்வேறு வீதிகளில் சுற்றி வந்த தேர், கோயில் அருகே நிலைக்கு கொண்டு வரப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு, மல்லிகார்ஜூன சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். அதே போல், மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவில் ஜாமபூஜை, ஹரிகதா போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது.

Tags : Mallikarjuna ,Temple ,Therthiru Festival Kolagalam ,
× RELATED விமானப்படை வாகனம் மீது பயங்கரவாதிகள்...