திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் எரியாத மின்விளக்குகளால் ெதாடர் சாலை விபத்துகள்

திருவெறும்பூர்,பிப்.21: திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ட்ரல் மீடியனில் உள்ள மின்சார விளக்குகள் எரியாததால் தொடர்ந்து சாலை விபத்துக்கள் நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுக்கான் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை மதுக்கான் நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்த நிலையில் சென்டர் மீடியன்களில் உள்ள மின்சார விளக்குகள் ஆங்காங்கே எரிவதில்லை. மேலும் சிக்னலுக்காக வைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளும் பல இடங்களில் செயல்படுவதில்லை.

இந்த நிலையில் துவாக்குடியில் இருந்து சுங்கச்சாவடி வரை திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று மீடியன்களில் உள்ள மின்விளக்குகள் கடந்த 3 மாதத்திற்குமேல் எரியவில்லை.

இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவெறும்பூர் தாலுகா செயலாளர் ராதாகிருஷ்ணன், இளைஞர் பெருமன்றத்தின் தாலுகா செயலாளர் தமிழரசன் ஆகியோர் திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை மின்விளக்குகள் எரியாததால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடப்பதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சாலையில் கடந்து செல்வதற்கும் நடப்பதற்கும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே உடனடியாக பழுதடைந்துள்ள மின் விளக்குகளை மதுக்கான் நிறுவனம் சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை மனுவை கொடுத்தனர்,

Related Stories: