×

கந்தர்வகோட்டை அருகே பெரியார் நினைவு சமத்துவபுரம் சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை முதன்மையாக தமிழில் இருக்க வேண்டும்

புதுக்கோட்டை, பிப்.21: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர் பலகைகள் முதன்மையாக தமிழில் இருக்க வேண்டும் என தொழிலாளர் துறை உதவி இயக்குநர் வெங்கடேசன் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:  தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர் பலகைகள் எப்படி இருக்க வேண்டும் என அரசாணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின்படி, பெயர் பலகையின் பிரதானமாக (5:3:2 விகிதத்தில்) தமிழிலும், அடுத்தபடியாக ஆங்கிலமும், மூன்றாவது நிலையில் உரிமையாளர் விரும்பும் மொழியும் இருக்கலாம். இந்த விதியின்படி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்ப் பலகைகள் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத நிறுவனங்களின் பெயர்ப் பலகையை வரும் 25ம் தேதிக்குள் மாற்ற வேண்டும். மாற்றப்படாத நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் ஆய்வு மேற்கொண்ட சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகளுக்கு சிறப்பு விருது: கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை, பிப்.21: தமிழக அரசு திருநங்கை தினமான ஏப்ரல் 15ம் தேதியன்று ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையருக்கு முன்மாதிரி சிறப்பு விருதான ரூ.1 லட்சம் காசோலை மற்றும் சான்று வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு திருநங்கைகளாகிய அவர்கள் சமுதாயத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய முயற்சியில் படித்து, தனித்திறமையை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியவர்களுக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இவ்விருதினை பெறுவதற்கு தகுதியுடைய திருநங்கைகள் http://awards.tn.gov.in என்ற இணையதள வாயிலாக வரும் 28ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்ணை (04322-222270) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Tags : Periyar Memorial Samathuvapuram ,Kandarvakottai ,Pudukottai ,Tamil ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...