×

குன்னம் அடுத்த கழனிவாசலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

குன்னம், பிப்.21: பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிவாசல் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பெரும்பாலான பகுதிகளில் நெல் சாகுபடியே அதிகமாக சாகுபடி செய்து அறுவடை செய்யப்படு நெல்லை இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்குவதோடு பல்வேறு மோசடி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் நெல்லினை தமிழக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிவாசல் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 3 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு சன்ன ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2160ம், மோட்டா ரக நெல்லிற்கு ரூ.2115-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கழனிவாசல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நிகழ்ச்சியில் பட்டியல் எழுத்தர் கோபிநாத், ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், துணை தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் ஆண்டாள் குடியரசு மற்றும் விவசாயிகள் பலர் கலந்து ‍கொண்டனர்.

Tags : Kalanivasal ,Gunnam ,
× RELATED குன்னம் அருகே மகா மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்