×

டெடிபியர் பொம்மைகள் விற்பனை அமோகம் பெரம்பலூர் /அரியலூர் பொதுமக்கள் குறைதீர் முகாமில் வங்கிக்கடன்

பெரம்பலூர், பிப்.21: பெரம்பலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மனுதாரர்களு க்கான கல்விக்கடன் மற்றும் வங்கிக் கடன்களை மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டஅரங்கில் நேற்று (20ம் தேதி) பொதுமக்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கற்பகம் கூட்டத்திற்கு தலைமை வகித்து, கடந்த வாரம் வழங்கிய கோரிக்கை மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரர்களுக்கான கல் விக்கடன் பெறுவதற்கான ஆணையினையும், தொ ழில் தொடங்குவதற்கான வங்கிக்கடன் உதவிகளை யும், 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை யும் வழங்கிப் பேசியதாவ து : இன்று (நேற்று) பெறப்பட்ட 287 மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத்தெரிவித்தார். கடந்த 13ம்தேதி நடை பெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டத்தில் வேப்பந்தட்டை தாலுகா, நெய்குப்பை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் என்பவர் மாடு வாங்கி தொழில் தொடங்க வே ண்டி வங்கிக்கடன் கோரி மனு அளித்திருந்தார். அந்த மனுமீது மேற்கொண்ட து ரித நடவடிக்கை காரணமா க சுரேஷிற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், வேப்பந்தட்டை வட்டம் பாதாங்கியை சேர்ந்த மாணவி பிரியா என்பவர் பி.எஸ்.சி நர்சிங் பயில வங்கிக்கடன் பெற்றுத்தரக் கோரி அளித்த மனுவிற்காக அந்த மாணவிக்கு ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ1.80 லட்சம் கல்வி கடன் பெறுவதற்கான ஆணையை மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார்.

மேலும் பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிக ளுக்கான இலவச வீட்டும னை பட்டா வழங்கும் திட்டத்தின்கீழ், 4 பயனாளிகளுக்கும், PMAY திட்டத்தின்கீழ் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 2 பயனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா என மொத்தம் 6 பயனாளி களுக்கு இலவச வீட்டும னைப் பட்டாக்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கைய ற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, சமூகப் பாதுகாப்பு த் திட்ட தனித்துணை கலெக்டர் சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கணபதி, மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் பரத்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Perambalur ,Ariyalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...