ராஜபாளையத்தில் மாமரங்களில் பூத்து குலுங்கும் பூக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி

ராஜபாளையம், பிப்.21: ராஜபாளையத்தில் மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் மா விவசாயம் நடந்து வருகிறது. இங்கு மா ரகமான சப்பட்டை, பஞ்சவர்ணம், கிளிமூக்கு அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. தற்போது மா மரங்களில் பூக்கள் கொத்து கொத்தாக மலர்ந்து காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: