ராமநாதபுரம், பிப்.21: மண்டபம், ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால் அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர் பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என ராமநாதபுரம் ஊரக உதவி செயற் பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையம் டவுன் 2, 3 பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது. இதனால் அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுனாள் ரோடு, சூரன்கோட்டை, இடையர்வலசை, அல்லிக்கண்மாய், சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே.கே.நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, எட்டிவயல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என ராமநாதபுரம் நகர் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.