ஆஸ்திரேலிய தூதர்கள் அமைச்சருடன் சந்திப்பு

மதுரை, பிப். 21: ஆஸ்திரேலியா நாட்டின் தூதர் பெரிஓ-பாரல், துணை தூதர் சாராகிர்லா ஆகியோர் நேற்று மதுரை வந்தனர். அவர்கள் சொக்கிகுளத்தில் உள்ள நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜனை இல்லத்தில் சந்தித்து, தமிழகத்தில் நிதி முதலீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து அமைச்சருடன் ஆஸ்திரேலியா தூதர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் கோயிலின் சிற்பங்கள்,

ஆயிரங்கால் மண்டபம், பொற்றாமரை குளம் உள்ளிட்டவைகளை கண்டு வியப்படைந்தனர். மேலும் அமைச்சருடன், மீனாட்சியம்மன் கோபுரங்கள் தெரியும் வகையில் புகைப்படங்களை எடுத்து கொண்டனர்.

Related Stories: