×

மாநில வரி துணை அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் வணிக வரித்துறை பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

மதுரை, பிப். 21: தமிழ்நாடு வணிக வரித்துறை பணியாளர் சங்கம் சார்பில் மாநில வரி துணை அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வணிக வரித்துறை பணியாளர் சங்க பொது செயலாளர் ஜெயராஜாராஜேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு வணிக வரித்துறை பணியாளர் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் தோழமை சங்கமான தமிழ்நாடு உதவி ஆணையர் வணிக வரி அலுவலர் மற்றும் துணை வணிக வரி அலுவலர் சங்கத்துடன் இணைந்து கூட்டு நடவடிக்கை குழுவாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாநில வரி துணை அலுவலர்கள் 1000 பேருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கால அவகாசம் வழங்காமல் அறிக்கைகள் கோருவதை தவிர்க்க வேண்டும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆய்வு கூட்டங்களை தவிர்த்து களப்பணி ஆற்ற களஅலுவலர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும். இரவு காவலர், அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர் காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்.23, 24ம் தேதிகளில் இரு நாட்கள் மாவட்ட அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, மார்ச் 1ம் தேதி கோட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், மார்ச் 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை அனைத்து அலுவலகங்களிலும் பிரசார இயக்கம் நடத்துவது, மார்ச் 15ம் தேதி ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது உள்ளிட்டவை தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Commercial Taxation Staff Association ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை,...