×

கரிக்காலி ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

குஜிலியம்பாறை, பிப். 21: குஜிலியம்பாறை அருகே கரிக்காலி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில், கலைஞர் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. முகாமிற்கு குஜிலியம்பாறை வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ தலைமை வகித்தார். கரிக்காலி ஊராட்சிமன்ற தலைவர் ஜெயமணிராஜா, கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை இணை தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். முகாமில் சர்க்கரை, இசிஜி, ஸ்கேன் பரிசோதனை, எலும்பு முறிவு, கண் மற்றும் பல் மருத்துவம், சித்த சிறப்பு மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 1016 பேர் கலந்து கொண்டனர். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வி கிருஷ்ணசாமி, செட்டிநாடு சிமெண்ட் ஆலை துணை பொது மேலாளர் (மனித வளம்) ஜெயபிரகாஷ், பள்ளி தலைமை ஆசிரியை ராதிகா, வட்டார சுகாதார ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், கிராம சுகாதார செவிலியர்கள், ஆய்வக நட்புனர்கள் மற்றும் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Karikali Panchayat Medical Camp ,
× RELATED திருச்சியில் இருந்து கரூர் வரை...