×

ஆத்தூர் தொகுதி மக்கள் எம்எல்ஏ முகாம் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம் : அமைச்சர் ஐ.பெரியசாமி வேண்டுகோள்

சின்னாளபட்டி, பிப். 21: ஆத்தூர் தொகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை ரெட்டியார்சத்திரம் மற்றும் செம்பட்டியில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலகத்தில் கொடுத்து தீர்வு காணலாம் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி இல்லத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுக்க ஆத்தூர் தொகுதி மக்கள் குவிந்த வண்ணம் இருப்பார்கள்.

தற்போது அமைச்சர் ஐ.பெரியசாமி ஈரோடு கிழக்குதொகுதி தேர்தல் பணியில் இருப்பதால் ஆத்தூர் தொகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் மற்றும் கிராம மக்கள் அவரது இல்லத்திற்கும், மாவட்ட கழக அலுவலகத்திற்கும் வந்துசென்ற வண்ணம் இருந்தனர். இது குறித்து கேள்விபட்ட ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ரெட்டியார்சத்திரம் ஒன்றிய மேற்கு தொடர்ச்சி மலைவாழ் மக்கள் நலன் கருதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோல ஆத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி செம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த இரு அலுவலங்களிலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து கணிணியில் பதிவேற்றம் செய்து தீர்வு காணலாம் என்றதோடு நேரடியாக மனு கொடுக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மார்ச் 1ம் தேதி முதல் தன்னை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம் என அறிவித்துள்ளார்.
மிக முக்கியமானது மாசி திருவிழாவாகும். இத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயில் முன் உள்ள கொடி மரத்தில் அம்மன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதில் உலுப்பகுடி கூட்டுறவு பால் பண்ணை தலைவர் சக்திவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் விஜயலட்சுமி தனபால் உள்ளிட்ட பத்தர்கள், கோயில் நிர்வாக அலுவலர் சூரியன், பூசாரி வகையறாக்கள், விழாக் குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் இன்று பக்தர்கள் உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து கோயிலில் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்குவர். இதைத் தொடர்ந்து வரும் பிப் 24,28, மார்ச் 3ம் தேதி இரவுகளில் தொடர்ந்து அம்மன் மயில், சிம்மம், அன்ன வாகனங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளில் மின் ரதத்தில் பவனி வரும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா வரும் மார்ச் 7ம் தேதி நடைபெறும்.

 மறுநாள் இரவு அம்மன் பூப்பல்லக்கில் நகர் வலம் வந்து கோயிலை சென்றடையும். இத்துடன் விழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த கோயில் நிர்வாக அதிகாரி சூரியன், பூசாரி வகையறாக்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். விழாவிற்கான குடிநீர், துப்புரவுப் பணிக்கான வசதிகளை பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமையில் பேரூராட்சி நிர்வாக அலுவலர் சரவணக்குமார் வழிகாட்டுதல்படி பணியாளர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags : People of Attur Constituency ,MLA ,Minister ,I.Periyaswamy ,
× RELATED தமிழ்நாட்டில் மழை பாதிப்புகள், புயல்...