×

பொள்ளாச்சி நகரில் ரேஷன் கடைகளில் இலவச வேட்டி சேலை விநியோகம்

பொள்ளாச்சி, பிப். 21: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட ரேஷன் கடைகளில், கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் முதல் தமிழ்நாடு அரசு மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கப்பட்டது. இதில், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கே முதற்கட்டமாக இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. ஆனால் வேட்டி சேலை உற்பத்தி குறைவால், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் வேட்டி சேலை வழங்குவது தடைபட்டது. இந்நிலையில், பல வாரத்துக்கு பிறகு, நகராட்சிக்கு உட்பட்ட அந்தந்த வார்டுகளில் உள்ள ரேஷன் கடைகளில் வேட்டி சேலை விநியோக பணி துவங்கப்பட்டுள்ளது. இதில், நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் நடந்த இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். தற்போது துவங்கப்பட்டுள்ள இலவச வேட்டி சேலை விநியோக பணிகள், அனைத்து ரேஷன் கடைகளில் விரைந்து வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vetti Saree ,Pollachi Nagar ,
× RELATED பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில்...