×

ஆதியோகி முன்பு தேவாரம் பாடும் குழந்தைகளுக்கு பரிசு

கோவை, பிப்.21:  கோவையில், ஆதியோகி முன்பு தேவாரம் பாடும் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும் என சத்குரு அறிவித்துள்ளார். இதுகுறித்து கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் வௌியிட்ட அறிக்கையில், ‘‘தேவாரம் ஆழமான பக்தி மற்றும் உயிரோட்டத்தை வளர்த்து, இந்த தன்மைகளை ஒருவரது வாழ்வின் அடித்தளமாக்குகிறது. ஆதியோகி முன்பு தேவாரம் பாடும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் சிறப்பு பரிசுகளை வழங்க உள்ளோம்.  தமிழ்நாட்டு குழந்தைகள் தங்கள் ஆழமான கலாச்சாரத்தை அறியவேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

மேலும் மகா சிவராத்திரி விழாவில் சத்குரு பேசுகையில், ‘‘12 வயதுக்கு கீழ் உள்ள தமிழ் குழந்தைகள் நம் நாட்டில் எங்கிருந்தாலும், வெளி நாடுகளில் இருந்தாலும் இங்கு வந்து தேவார பாடல் பாடினால் அவர்களுக்கு சிறப்பு பரிசு அளிக்கப்படும்.  இது ஆண்டு முழுவதும் எந்த நாளிலும், தமிழ் குழந்தைகள் எங்கிருந்து வந்தாலும் ஆதியோகி முன்பு தேவாரம் பாடிவிட்டு பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம். கிராமங்கள் தோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தேவாரம் கற்றுக்கொண்டு ஆதியோகி முன்பு தேவாரம் பாட நீங்கள் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நாம் அனைவரும் நிகழ செய்ய வேண்டும்’’ என்றார்.

மகா சிவராத்திரி விழா, தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்  என்ற தேவார பாடலுடன் துவங்கியது. அதேபோல, விழா நிறைவு பெறுவதற்கு முன்னரும் மாதர் பிறை கண்ணி யானை என்ற தேவார பாடல் பாடப்பட்டது. ஈஷாவில் உள்ள சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்களுக்கு தேவாரம், திருவாசக பாடல்கள் கற்று தரப்படுகிறது. அந்த மாணவர்கள் பாடி சவுண்ட்ஸ் ஆப் ஈஷா என்னும் தலைப்பில் வெளியிட்ட தேவார பாடல் ஆல்பம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பூமி பூஜை  குடிநீர் தொட்டி கட்டுமான பணி அகில இந்திய காங். கமிட்டி உறுப்பினர்கள் நியமனம்

கோவை,  பிப். 21:  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களாக, கோவை வடக்கு  மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி.மனோகரன், மாநில பொதுச்செயலாளரும், கோவை மாநகராட்சி 69-வது வார்டு  கவுன்சிலருமான பி.எஸ்.சரவணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதற்கான உத்தரவை, சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரது அறிவுறுத்தலின்படி,  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே  பிறப்பித்துள்ளார்.

Tags : Adiyogi ,
× RELATED பல்வேறு மாநிலங்களில் இருந்து...