அரியலூர் மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு 2, 9ம்தேதி விடுமுறை

அரியலூர், அக்.1: அரியலூரில் நாளை (2.10.2022) மற்றும் 9.10.2022 ஆகிய இரண்டு நாட்களுக்கு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தகவல் தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடம் ஆகிய அனைத்திற்கும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2.10.2022 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் மிலாடிநபியை முன்னிட்டு 9.10.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு உலர்தினமாக (ட்ரை டே) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Related Stories: