சிவகாசியில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்

சிவகாசி, அக். 1: சிவகாசி மாநகராட்சியில் வாறுகால் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களில் குடியிருப்புவாசிகள், கடை உரிமையாளர்கள் தங்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். குப்பைகளை சேகரிக்க வாகனங்கள் வந்தும், பொதுஇடங்களில் குப்பைக் கொட்டுவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், சுகாதார அலுவலர் அபுபக்கர் சித்திக், சுகாதார ஆய்வாளர் பாண்டியராஜன், துாய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், நகரில் எங்கு அதிகமாக குப்பை கொட்டப்படுகின்றதோ அப்பகுதியில் காத்திருந்து குப்பை கொட்டுபவர்களுக்கு ஸ்பாட் பைன் விதிக்கின்றனர்.

துாய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்களின் பெண் பணியாளர்கள் பகலிலும் ஆண் பணியாளர்கள் இரவு 12 மணி வரையிலும் ஷிப்ட் முறையில் இப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர். குப்பைகள் சேகரிக்கப்பட்ட இடத்தில், அங்கேயே அவர்கள் காத்திருந்து மீண்டும் குப்பை கொட்ட வருபவர்களுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கின்றனர். இது குறித்து ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘ஒரு வாரமாக தொடர்ச்சியாக இப்பணியினை மேற்கொண்ட நிலையில், பொதுஇடங்களில் குப்பை கொட்டுவது குறைந்துள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.

Related Stories: