மடப்புரம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்புவனம், அக்.1: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி மற்றும் பெளர்ணமி நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். நேற்று புரட்டாசி வெள்ளி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மதியம் ஒரு மணிக்கு நடைபெறும் உச்சி காலபூஜை மிகவும் விசேசமானதாகும். உச்சி கால பூஜையில் அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

Related Stories: