காளையார்கோவிலில் எல்.ஐ.சி முகவர்கள் போராட்டம்

காளையார்கோவில், அக். 1: காளையார்கோவிலில் எல் ஐ சி அலுவலகம் முன்பு முகவர் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் எல் ஐ சி பாலிசிதாரர்கள் கட்டி வரும் பணத்திற்கு ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்கிவிட வேண்டும், குழுக்காப்பிட்டை உயர்த்திட வேண்டும், முகவர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கிட வேண்டும், நேரடி முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும், முகவர்களுக்கு நலநிதி அமைத்திட வேண்டும், முகவர்களை தொழில் முறையாக அங்கீகரிக்க வேண்டும்,

முகவர்களுக்கு ஓய்வூதியம் வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முழங்க மத்திய அரசை கண்டித்து தொடர் போராட்டம் நடைபெற்றது போரட்டத்திற்கு முகவர் சங்கத் தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார், இராஜமோகன் முன்னிலை வகித்தார், வட்டார் தலைவர் சுப்பையா மற்றும் முகவர்கள் கலந்து கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

Related Stories: