×

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம்

தூத்துக்குடி, செப். 30: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழகம்  முழுவதும் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை கழகத்தால்  புதிதாக நியமனம் செய்து அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதன்படி, தூத்துக்குடி  தெற்கு மாவட்ட செயலாளராக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை  பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும்  நியமிக்கப்பட்டு உள்ளார். தெற்கு மாவட்ட அவைத்தலைவராக அருணாசலம், மாவட்ட  துணை செயலாளர்களாக (பொது)ஜெயக்குமார்ரூபன்,  (ஆதிதிராவிடர்)ஆறுமுகப்பெருமாள், (மகளிர்)சோபியா ஆகியோரும், பொருளாளராக  ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக பிரம்மசக்தி,  டேவிட்செல்வின், மாடசாமி ஆகியோரும், பொதுக்குழு உறுப்பினர்களாக  சொர்ணகுமார், முத்துசெல்வன், சாகுல்ஹமீது, இந்திரகாசி, ஆறுமுகபாண்டியன்,

ராஜலெட்சுமி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒன்றிய செயலாளர்களாக  தூத்துக்குடி கிழக்கு சரவணக்குமார், தூத்துக்குடி மேற்கு சுப்பிரமணியன்,  தூத்துக்குடி மத்தி ஜெயக்கொடி, ஓட்டப்பிடாரம் வடக்கு இளையராஜா,  ஓட்டப்பிடாரம் மேற்கு சண்முகையா எம்எல்ஏ, திருச்செந்தூர் செங்குழிரமேஷ்,  ஆழ்வார்திருநகரி கிழக்கு சதீஷ்குமார், ஆழ்வார்திருநகரி மத்தி நவீன்குமார்,  ஆழ்வார்திருநகரி மேற்கு பார்த்திபன், உடன்குடி கிழக்கு இளங்கோ, உடன்குடி  மேற்கு பாலசிங், வைகுண்டம் கிழக்கு கோட்டாளம், வைகுண்டம் மத்தி  ரவி, வைகுண்டம் மேற்கு கொம்பையா, கருங்குளம் வடக்கு ராமசாமி,  கருங்குளம் தெற்கு இசக்கிபாண்டியன், கருங்குளம் கிழக்கு சுரேஷ்காந்தி,  சாத்தான்குளம் வடக்கு ஜோசப், சாத்தான்குளம் மத்தி பொன்முருகேசன்,  சாத்தான்குளம் தெற்கு பாலமுருகன், நகர செயலாளர்களாக காயல்பட்டினம்  முத்துமுஹம்மது, திருச்செந்தூர் சுடலை ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பேரூர்  செயலாளர்களாக ஆறுமுகநேரி நவநீதபாண்டியன், கானம் ராமஜெயம், ஆத்தூர்  முருகானந்தம், தென்திருப்பேரை முத்துவீரப்பெருமாள், நாசரேத் ஜமீன்சாலமோன்,  ஆழ்வார்திருநகரி கோபிநாத், உடன்குடி மால்ராஜேஷ், ஏரல் ராயப்பன், சாயர்புரம்  கண்ணன், வைகுண்டம் சுப்புராஜ், பெருங்குளம் நவநீதமுத்துகுமார்,  சாத்தான்குளம் இளங்கோ, ஸ்பிக்நகர் பகுதி செயலாளர் ஆஸ்கர், அன்னை இந்திரா  நகர் பகுதி செயலாளர் சிவக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Tags : Minister ,Anitha Radhakrishnan ,Tuticorin South District ,DMK ,
× RELATED வேட்பாளராக அறிவிக்கப்பட்டு...