நெல்லை மாநகர திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அமர்வு கைப்பந்து போட்டி

நெல்லை, செப். 30: நெல்லையில் மாநகர திமுக  சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கல் துவங்கியது. திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான ‘மனிதநேய உதயநாளை’ முன்னிட்டும், நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர்  அப்துல் வஹாப் எம்எல்ஏ ஆலோசனையின் பேரிலும் நெல்லையில் மாநகர திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டி நடக்கிறது.

இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இதையொட்டி  முதல் அணியாக நெல்லை மாவட்ட அணியினர் தங்களது பெயர்களை பதிவு செய்துகொண்டனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் உலகநாதன், ரவீந்தர், 39வது வார்டு செயலாளர் பாலமகேஷ், ஆல்வின் செல்லத்துரை மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.

Related Stories: