16 வயது‌ சிறுமி பாலியல் பலாத்காரம் இளைஞருக்கு 14 ஆண்டு சிறை: திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவள்ளூர், செப்.30: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 10.01.2016 அன்று 16 வயது சிறுமியின் தாயார் தனது மகளை காணவில்லை என  புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சிறுமி காணவில்லை என வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். பின்னர் வழக்கு விசாரணையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது சம்மந்தமாக சிறுமியின் வீட்டிற்கு அருகே  வசிக்கும் ஏழுமலை மகன் ஜெய்கணேஷ்(36)  என்பவர்  மீது டேங்க் பேக்ட்ரி காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா ஆஜராகி வாதாடினார். வழக்கின் விசாரணையில்  திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில்‌ ஜெய் கணேஷ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கு விசாரணை நிறைவு பெற்றதையடுத்து நீதிபதி சுபத்ராதேவி நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தது போன்ற   குற்றத்திற்காக ஜெய்கணேஷ்க்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ₹4,000 அபராதமும் விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி சுபத்திராதேவி தீர்ப்பளித்தார். தீர்ப்புக்குப்பின் ஜெய்கணேஷ்(36) போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹ 2லட்சம் நிவாரண நிதியாக வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் விசாரணை முடித்து ஜெய்கணேஷ்க்கு தண்டணை பெற்று தந்த இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் காவலர்களைஆவடி காவல் ஆணையாளர்  சந்தீப் ராய் ரத்தோர்  வெகுவாக பாராட்டினார்.

Related Stories: