நரிக்குடி அருகே சமத்துவபுரத்தில் மராமத்து பணி மேற்கொள்ள ஆய்வு

காரியாபட்டி, செப். 30: நரிக்குடி அருகே, ஆதித்தனேந்தலில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மராமத்துப் பணி மேற்கொள்ள, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நரிக்குடி அருகே ஆதித்தனேந்தல் கிராமத்தில் கடந்த 2009ல் திமுக ஆட்சியின்போது சமத்துவபுரம் கட்டப்பட்டது. இந்த குடியிருப்புகளில் கடந்த 13 ஆண்டுகளாக பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் போதிய பராமரிப்பு இல்லாததால் வீடுகளின் மேற்கூரை சேதம், விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் குடியிருப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவின் பேரில், மாவட்ட நிர்வாகம் கடந்த ஒரு மாத காலமாக பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் குடியிருந்து வரும் வீட்டு உரிமையாளர்கள், சேதமடைந்த வீடுகளின் தன்மை, வீடுகளின் கணக்கீடு ஆகியவை குறித்து ஆய்வுப்பணி நடத்தி வருகிறது. இதன்படி, பெரியார் நினைவு சமத்துவபுரத்தை, நரிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரின்ஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரலிங்கம் உட்பட யூனியன் அலுவலக அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: