அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளில 2ம் தேதி கிராமசபை கூட்டம்

அரியலூர், செப்.29: அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளிலும் வருகிற அக்டோபர் 2ம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப் பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும். இக்கிராம சபைக் கூட்டத்தில் மாவட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

24 மணிநேரத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி தெரி விக்கையில், இணையவழி மூலம் பணமோசடி புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் “1930” என்ற இலவச அழைப்பு எண்ணை அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும். சைபர் குற்றங்களுக்கு www.cyber crime.gov.in என்ற இணைய தளத்தில் புகார் பதிவிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். பெரம்பலூர் மாவட்ட த்தில் சைபர் கிரைம் குற்ற ங்களில் நேர்த்தியா செயல் பட்ட போலீசார்அனைவருக் கும் எனது பாராட்டுகள் என தெரிவித்தார்.

Related Stories: