தொழிலாளி கழுத்து நெரித்து கொலை வீட்டு வாசலில் தூக்கில் தொங்கவிட்ட கொடூரம் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே அடையாளம் தெரியாத

ஒடுகத்தூர், செப்.29: ஒடுகத்தூர் அருகே அடையாளம் தெரியாத ெதாழிலாளியை ெகாலை செய்து ஒரு வீட்டின் வாசலில் சடலத்தை தொங்கவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கல்லுட்டை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் உள்ள கூரையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக தூக்கில் தொங்குவதை நேற்று அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, உடனே அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸ் எஸ்ஐ அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது, அங்குள்ள ஒரு ஓட்டு வீட்டின் வாசல் பகுதியில் ஆண் ஒருவர் துண்டால், தூக்கு போட்ட நிலையில் சடலமாக ெதாங்கியது தெரிய வந்தது. அந்த வீடு ஒடுக்கத்தூரைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் தொழில் செய்யும் ஒருவரது வீடு என்பது தெரியவந்தது. மெயின்ரோட்டை ஒட்டி இருக்கும் இந்த வீட்டில் யாரும் இல்லாமல் சில பொருட்கள் மட்டும் வைத்திருந்துள்ளனர். மர்ம கும்பல் அவரை கொலை செய்து வீடு முன் சடலத்தை தொங்கவிட்டு சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. தூக்கில் சடலமாக ெதாங்கியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் மர்மச் சாவு என்று வழக்குப்பதிந்து, சம்பவம் நடந்த பகுதியில் நடந்த செல்போன் உரையாடல்கள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: