×

நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி திருவிழா துவக்கம்

நெல்லை, செப்.29: நெல்லையப்பர் கோயிலில் சோமவார மண்டபத்தில் நவராத்திரி திருவிழா துவங்கி நடந்து வருகிறது. இதில் திரளான பக்தர்கள் தினமும் பங்கேற்று வருகின்றனர். நெல்லையப்பர் கோயிலில் கடந்த 26ம் தேதி சோமவார மண்டபத்தில் நவராத்திரி விழா துவங்கியது. விழா வரும் 4ம்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் காலையில் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய உற்சவர்களுக்கு கும்பம் வைத்து ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. பல்வேறு சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு, மின் அலங்காரம் செய்யப்பட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது. விழா நாட்களில் கோயிலில் உள்ள நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் மாலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், நெல்லை பாலகுரு பாகவதர் நாமசங்கீர்த்தனம், நாட்டியபள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான 5ம் தேதி விஜயதசமியன்று சுவாமி சந்திரசேகரர், வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாலை 4 மணிக்கு வன்னி மரத்தில் அம்பு விடும் காட்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் அய்யர் சிவமணி ஆகியோர் செய்துள்ளனர்.

Tags : Navratri festival ,Nellayapar ,
× RELATED நெல்லையப்பர் கோயிலில் டிஎம்பி...