வழக்கறிஞர் காந்தி சிறப்பு கண்காட்சி

மதுரை, செப். 29: ஐகோர்ட் மதுரை கிளை வளாகத்தில், காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளை இணைந்து காந்தியை நினைவுகூறும் விதமாக \”வழக்கறிஞர் காந்தி\” என்ற சிறப்பு கண்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது. கண்காட்சியை ஐகோர்ட் மதுரை கிளை நிர்வாக நீதிபதி மகாதேவன் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி வரும் 3ம் தேதி வரை நடக்கிறது. விழாவில் காந்தி அருங்காட்சியகம் செயலாளர் நந்தாராவ் மற்றும் நீதிபதிகள் பவானி சுப்புராயன், புகழேந்தி, மதி, தாரணி, விஜயகுமார் உள்ளிட்ட நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: