×

டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு

நாமக்கல், செப்.29: நாமக்கல்லில் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க மகாசபை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. சங்கத்தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் மோகன் வரவேற்றார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகளுக்கு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைவராக எஸ்எல்எஸ் சுந்தர்ராஜன், செயலாளராக செந்தில்குமார், பொருளாளராக அம்மையப்பன், உதவித்தலைவராக பன்னீர்செல்வம், துணைத்தலைவராக பிரபாகர், இணைச்செயலாளராக கோபி, துணைச்செயலாளராக கவுசிகன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். புதிய நிர்வாகிகளை வாழ்த்தி, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், சின்ராஜ் எம்பி.,  மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், மோட்டார் வாகன சட்டப்படி, போக்குவரத்து வாகனங்களை பதிவு செய்யப்பட்ட மாநிலத்தில் மட்டும் லோடு ஏற்றி இறக்க அனுமதிக்கப்படுகிறது. எல்பிஜி வாகனங்களை பொறுத்தவரை எல்பிஜி லோடுகளை ஏற்றி செல்ல, தனியாக வெடிபொருள் துறையில் அனுமதி பெறப்பட்டு, பிரத்யேக உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் மற்ற வாகனங்களுக்கு எந்த வகையிலும் போட்டியில்லை.

எனவே, எல்பிஜி வாகனங்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் லோடு ஏற்றி, இறக்க விதி விலக்கு அளிக்கவேண்டும். தற்போது ஆயில் நிறுவனங்களுடன் ஏற்படுத்திய வாடகை ஒப்பந்தம், அடுத்த ஆண்டு ஆகஸ்டுடன் முடிகிறது. எனவே, ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய 3 ஆயில் நிறுவனங்களும் டெண்டரை மேலும் 3 ஆண்டு காலத்துக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கையை, மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் சீரங்கன், செயலாளர் அருள், உதவிதலைவர்கள் சுப்புரத்தினம், பாலசந்திரன், ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சின்னுசாமி, செயலாளர் தாமோதரன், பொருளாளர் சுப்பிரமணியன், உதவித்தலைவர் செல்வகுமார், கிருஷ்ணமூர்த்தி, இணைச்செயலாளர் பரமசிவம், ஆட்டோநகர் அசோசியேசன் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் தீபக்குமார், உதவிதலைவர் தங்கராஜ், துணைச்செயலாளர் விஜய், கொமதேக மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட அமைப்பாளர் ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tanker Truck Owners Association Executives ,
× RELATED சேலத்தில் 103.7 டிகிரி வெயில்