தருவைகுளம் ஆலய திருவிழாவில் அதிதூதர் மிக்கேல் சப்பர பவனி

குளத்தூர், செப். 28: குளத்தூர் அருகே உள்ள தருவைகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழா 7ம் நாளில்  கீழமுடிமண் பங்குதந்தை பென்சிகர், காத்தான்பள்ளம் பங்குதந்தை சவரி ஆகியோர் தலைமையில் உசிலம்பட்டி பங்குதந்தை ஜெய்ஜோசப் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம், ஜெபமாலை நடைபெற்றது. தொடர்ந்து வான்படை தளபதி அதிதூதர் மிக்கேலின் சப்பர பவனி, தருவைகுளம் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. இதில் கலந்து கொண்ட இறைமக்கள் அச்சுவெல்லம், உப்பு, மஞ்சள், மெழுகுவர்த்தி போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து ஆலயம் வந்தடைந்த சப்பர பவனி சிறப்பு ஜெபமாலையுடன் நிறைவுற்றது. திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை வின்சென்ட், ஆலய கட்டளைகாரர்கள் செய்துள்ளனர்.

Related Stories: