குமரி கலெக்டர் ஆபீசில் திடீர் தீ

நாகர்கோவில், செப்.28 :குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தரை தளத்தில் மின்சார கட்டுப்பாட்டு அறை உள்ளது. அங்குள்ள மின்சாதன பொருட்களில் நேற்று முன் தினம் நள்ளிரவு  திடீரென புகை வந்தது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. உடனடியாக அங்கு அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் முகமது சலிம் தலைமையில் தீயணைப்பு துறையினர் சென்று மின்சாதன பொருட்களில் பிடித்து எரிந்த தீயை அணைத்தனர். உயரழுத்த மின்சாரம் காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. சரியான நேரத்தில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நேசமணிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மின்வாரிய  பணியாளர்கள் சேதமடைந்த மின்சாதன பொருட்கள் மாற்றும் பணியை ெதாடங்கியுள்ளனர்.

Related Stories: