×

செம்பனார்கோயில் அருகே மாயமான டிரைவர் ஆற்றில் சடலமாக கரை ஒதுங்கினார்

செம்பனார்கோயில், செப்.28: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே வடகரை மில்லத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (43). டிரைவர். கடந்த 15ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சண்முகம், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் சண்முகம் கிடைக்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், கடந்த 19ம் தேதி செம்பனார்கோயில் போலீசில் புகார் செய்தனர். போலீசார், வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி செம்பனார்கோயில் அருகே கீழ்மாத்தூர் வெள்ளத்திடல் அருகே மஞ்சளாற்றில் சண்முகம் பிணமாக கரை ஒதுங்கினார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து சண்முகம் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sembanarcoil ,
× RELATED ஆக்கூர் பகுதியில் இன்று மின்தடை