×

நவராத்திரி விழாவையொட்டி சிறுவாச்சூர் மதுரகாளியம்மனுக்கு மீனாட்சி அலங்காரம்

பெரம்பலூர், செப்.28: பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் 41ஆம் ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழாவையொட்டி நேற்று உற்சவருக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் அருள்மிகு மதுர காளியம்மன் திருக் கோவிலில் 41ஆம் ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் நவ ராத்திரிவிழா கடந்த 26ஆம் தேதி தொடங்கி வெகு விம ரிசையாக நடைபெற்று வரு கிறது. இதன்படி கடந்த 26 ஆம் தேதி, முதல் நாளான திங்கட்கிழமையன்று மாலை 7.30 மணியளவில் உற்சவர் ஸ்ரீமதுரகாளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

அதனைத் தொடர்ந்து 2வது நாளான நேற்று(27ம் தேதி) செவ்வாய்கிழமையன்று உற்சவர் ஸ்ரீமீனாட்சி அலங் காரத்தில் பக்தர்களுக்கு அ ருள் பாளித்தார். இதனைக் காண சிறுவாச்சூர் மற்றும் பெரம்பலூர், மருதடி, அயி லூர், செல்லியம்பாளையம், விளாமுத்தூர் மற்றும் திரு ச்சி, அரியலூர், தஞ்சை, செ ன்னை, மதுரை, புதுகை, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண் டு பக்தியுடன் அம்மனை வ ழிபட்டுச் சென்றனர். பூஜை க்கான ஏற்பாடுகளை கோ வில் செயல் அலுவலர் வே ல் முருகன் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பூஜைக ளை லட்சார்ச்சனை அர்ச்ச கர்கள் செந்தில், மனோக ரன் மற்றும் சிவாச்சாரியார் கள் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து 3வது நாளான இன்று(28ம் தேதி) உற்சவர் ஸ்ரீகாமாட்சி அலங்காரத்திலும், 4வது நாளான நாளை(29ம் தேதி) உற்சவர் ஸ்ரீராஜ ராஜே ஷ்வரி அலங்காரத்திலும், 5வது நாளான வெள்ளிக் கிழமை உற்சவர் ஸ்ரீ துர் கை அலங்காரத்திலும், 6 வது நாளான சனிக்கிழ மை உற்சவர் ஸ்ரீகருமாரி யம்மன் அலங்காரத்திலும், 7வது நாள் ஞாயிற்றுக்கிழ மை உற்சவர் ஸ்ரீமாரியம் மன் அலங்காரத்திலும், 8வது நாள் திங்கட்கிழமை உற்சவர் ஸ்ரீ லட்சுமி அலங் காரத்திலும், 9வது நாளான 4ஆம் தேதி செவ்வாய்க்கி ழமை உற்சவர் ஸ்ரீசரஸ்வதி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். 10வது நாளான 5ஆம் தேதி புதன்கிழமை உற்சவர் ஸ்ரீமகிஷாசுர மர்த்தினி அலங் காரத்தில் அருள்பாளிக்கி றார். அன்று புஷ்பாஞ்சலி யும், இரவு 8மணியளவில் ஸ்ரீஅம்மன் புறப்பாடு, அம்பு போடுதலுடன் விழா நிறை வடைகிறது.

Tags : Meenakshi ,Siruvachur ,Madurakaliamman ,Navratri festival ,
× RELATED மதுரை சித்திரை திருவிழா.. அன்னதானம்...