அரியலூரில் இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர், செப்.28: அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்.

ஆதார் அட்டையுடன் வருவோருக்கு மட்டும் பெரம்பலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் ஆ தார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வே ண்டும். இந்த உத்தரவை மீறிடும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்த உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு  உரங்க ளை மாற்றம் செய்திடவும், விற்பனை செய்திடவும் கூடாது என கண்டிப்புடன் தெ ரிவிக்கப்படுகிறது. மேலும் உரங்களை வெளி மாவட்ட ங்களிலிருந்தும் கொள்மு தல் செய்யக்கூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

புகார் தெரிவிக்க... உர விற்பனையில் நடக்கு ம் முறைகேடுகள் தொடர் பான புகார்களை, பெரம்ப லூர் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பா டு) 94870 73705 என்ற எண் ணிற்கும், வேப்பந்தட்டை வட்டார வேளாண்மை உத வி இயக்குநர் 8056782946, பெரம்பலூர் வட்டார வேளா ண்மை உதவி இயக்குநர் 9787061637, ஆலத்தூர் வட் டார வேளாண்மை உதவி இயக்குநர் 9443026769, வே ப்பூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் 94425348 65 ஆகிய எண்களை தொட ர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

Related Stories: