×

அன்னவாசல் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் விநியோகம்

விராலிமலை,செப்.28: உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நெற்பயிரில் செயல் விளக்கம் அமைப்பதற்கு சுமார் 15 எக்டர் நிலத்திற்கு தொழில்நுட்ப செயல் விளக்கம் அமைப்பதற்கு அன்னவாசல் வேளாண் விரிவாக்க மையம் சார்பில் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. நடப்பு 2022-23ம் ஆண்டின் கலைஞரின் அனைத்த கிராம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆலத்தூர் ஊராட்சி கிராமங்களான சித்தன்னவாசலில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட
செயல்விளக்கம் அமைக்க விதை நெல் தொகுப்பு அடிப்படையிலான அஸோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்ட்ரியா, நெல் நுண்சத்து, வரப்பு பயிர், துவரை விதைகள் மற்றும் நெல் அறுவடைக்குப் பின் சாகுபடி செய்ய உளுந்து விதைகள் அதற்குரிய பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம், நுண்சத்து ஆகியன முழு மானியத்தில் புதுக்கோட்டை மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு ஆலோசகர் சர்புதீன் மற்றும் அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநர் அ.பழனியப்பா விவசாயிகளுக்கு வழங்கினர். ஏற்பாடுகளை கவுசல்யா, மோனிகா, மகாலெட்சுமி, சண்முகப்பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Annavasal Agricultural Extension Centre ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...