இன்று உலக வெறிநோய் தினம் செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி

தஞ்சாவூர் செப். 28: இன்று உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி போடப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28ம் தேதி உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு கால்நடை பன்முக மருத்துவமனை உள்ளிட்ட தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களில் காலை 8 மணி முதல் 12 மணி வரை 3 மாதங்களுக்கு மேற்பட்ட வயதுடைய நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது.

பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் செல்லப்பிராணிகளுக்கு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகளில் இலவசமாக வெறிநோய் தடுப்பூசி மேற்கொண்டு இக்கொடிய நோயிலிருந்து பாதுகாத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தஞ்சாவூர் கால்நடை பன்முக மருத்துவமனையில் இன்று நடைபெறும் உலக வெறிநோய் தின தடுப்பூசிப் பணி முகாமிற்கு தலைமையேற்று துவக்கிறார்

Related Stories: