63 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட நன்னிலம் அரசு மருத்துவமனை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

நன்னிலம், செப்.28: 63 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட நன்னிலம் அரசு மருத்துவமனை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இங்கு தனியாருக்கு இணையாக சுற்றுப்புற தூய்மையும், அனைத்து நோய்களுக்கும் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் பொது சுகாதாரத்துறை மருத்துவ பணிகள் பாராட்டுக்குரிய வகையில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் இயங்கிவரும் ஆனைகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பூந்தோட்டம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம், பேரளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொல்லாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மக்கள் மருத்துவப் பணியில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது. மக்களைத் தேடிய மருத்துவம் என்ற திட்டம் மக்களிடத்தில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வையும், மக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் கிராமப்புற செவிலியர்களின் பங்களிப்பு என்பது மகத்தானதாக அமைந்திருந்தது, வீடு வீடாக சென்று, மக்களின் வயதிற்கு ஏற்ப, கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு, மக்களை தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கான உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்களை அதிக அளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள செய்தனர். அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகள் மேற்கொள்ளக்கூடிய மேம்படுத்தப்பட்ட மருத்துவப் பணிகளை மேற்கொள்ள கூடிய வகையில் தங்களின் ஆரம்ப சுகாதார நிலையங்களை வளப்படுத்தி அமைத்திருப்பது சிறப்புக்குரியது. அரசின் திட்டங்கள் அரசு சொல்லக்கூடிய நலத்திட்ட பணிகள், உடனுக்குடன் மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றக்கூடிய சுகாதார ஆய்வாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள மாசு நாள் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்த விழிப்புணர்வுகளை மக்களிடத்தில் எடுத்துக் கூறி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

பள்ளி சிறுவர்களுக்கான மருத்துவ முகாம்கள், தேசிய குடல் புழு நீக்கம் தினம் முன்னிட்டு அனைத்து குழந்தைகளுக்கும், குடற்புழு நீக்கம் மாத்திரைகளை செவிலியர்களை முன் நின்று கொடுத்து பணியை மேற்கொள்வது சிறப்பான ஒன்று, அதேபோல் போலியோ சொட்டு மருந்து, அனைத்துக் குழந்தைகளும் சென்றடையக்கூடிய வகையில் ஆண்டுதோறும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சிறப்பு முகாம்கள், நடைபெறும் பொழுதெல்லாம் அந்தப் பகுதியில் உள்ள மக்களிடத்தில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறனர். நன்னிலம் அரசு மருத்துவமனை இப்பகுதிக்கு ஒரு மகத்தான வரப்பிரசாதம், அறுபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இம்மருத்துவமனை இப்பகுதி மக்களிடம் நன்மதிப்பை பெற்ற மருத்துவமனையாகும். இங்கு 13க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகிறனர். இங்கு அனைத்து தரப்பட்ட மருத்துவர்களின் வருகை இருப்பதனால், எல்லா விதமான நோய்களுக்குமான மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு இணையாக மருத்துவ மனையின் சுற்றுப்புற தூய்மை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இங்கு பணியாற்றும் மருத்துவர்கள் இளைஞர்களாக இருந்தாலும், வருகின்ற நோயாளிகளிடம் காட்டுகின்ற கனிவும், நோய் பற்றி அறிந்து மருந்து வழங்கும் விதம் பாராட்டுக்குரியது. ஒரு சில நேரங்களில் மருத்துவர்களே, கட்டு கட்டும் இடத்திற்கு வந்து, சிகிச்சை மேற்கொண்டு கட்டிய நிகழ்வுகளும் மருத்துவமனையில் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. தமிழக அரசு மகத்தான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்ற நிலையில், மருத்துவத்துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்ற நிலையில், கிராமப்புறப் பகுதியில் மருத்துவர்களின் சேவை எடுக்கப்பட வேண்டும் என்ற அரசின் எண்ணத்திற்கு ஏற்ப தற்போதைய மருத்துவர்கள் பணியாற்றி வருவது அரசின் திட்டங்கள் எளிதில் மக்களிடத்தில் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது. பொது சுகாதாரத் துறை, மருத்துவத் துறையின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளின் மருத்துவ சேவை என்பது தமிழக அரசின் எண்ணத்தை வெளிப்படுத்தக் கூடிய வகையில் தமிழக அரசின் எண்ணத்தை வெளிப்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

தற்போது நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் உள்ளது. நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிறுவர்களுக்கான சிறப்பு வார்டு ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும். மக்களை தேடிய மருத்துவம், கிராமங்களிலேயே தரமான மருத்துவ சேவை, மக்களின் அருகில் மருத்துவ சேவை, கிராமங்களில் மருத்துவப் பணி, என மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப படிப்படியான மருத்துவ சேவையினை தமிழக அரசு மேற்கொண்டு வருவதில் மக்களின் நன்மதிப்பை தமிழக அரசின் மருத்துவத் துறை பெற்றுள்ளது என்பதை தமிழக அரசின் மருத்துவ சேவையால் பயனடைந்தவர்கள் கேட்க முடிகிறது.

Related Stories: