×

வளர்ச்சி பணிகளுக்கு உதவிட வரியினங்களை பொதுமக்கள் விரைந்து செலுத்த வேண்டும் நெல்லை மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

நெல்லை, செப்.27: நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெல்லை மாநகராட்சியின் மாமன்ற ஒப்புதலோடு கடந்த ஏப்ரல் 1ம் ேததி சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் அரசு மற்றும் அரசு சார்பு கட்டிடங்களுக்கு 50 சதவீத வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. காலிமனைகளுக்கு ஏற்கனவே உள்ள வரியில் 100 சதவீதம் வரிசீராய்வு செய்யப்பட்டுள்ளது. எனவே வரி செலுத்துவோர் உடனடியாக வரிகளை செலுத்திட வேண்டும். இதுபோன்று குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றையும் செலுத்திட வேண்டும். மேலும் சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை, கட்டிடங்களை சீல் வைத்தல் போன்ற சட்டபூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

காலி மனை உரிமையாளர்கள் தங்களுக்குரிய காலிமனை வரியினை செலுத்த தவறும் பட்சத்தில், காலிமனைகளை தற்காலிகமாக மாநகராட்சி உபயோகத்திற்கு பயன்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு உதவிடும் வகையில், அனைத்து வரியினங்களையும் பொதுமக்கள் செலுத்திட வேண்டும். வரி செலுத்துவோர் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வரிவசூல் மையங்களில் நேரடியாக சென்று செலுத்தலாம். மேலும் வீடுகளுக்கு வரிவசூல் செய்ய வரும் வரிவசூலிப்போரிடம், ‘‘ஆணையாளர், திருநெல்வேலி மாநகராட்சி’ என்ற பெயருக்கு உரிய வரித்தொகைக்கு காசோலையாக மட்டும் வழங்கி, அதற்கான ரசீது பெற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Commissioner ,Nellai Municipal Corporation ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...