பெண்ணிடம் 7 பவுன் நகை மாயம்

நெல்லை, செப். 27: நெல்லை டவுனில் கோயில் விழாவில் பங்கேற்ற பெண்ணிடமிருந்து 7 பவுன் தங்க நகை மாயமானது. நெல்லை டவுன் பெரிய தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி முத்தம்மாள் (53). இவர் அந்த பகுதியில் நடந்த கோயில் விழாவில் கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகை மாயமானதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதுகுறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: