மாற்று இடம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கடலூர், செப். 27:  கடலூர் மாவட்டம் அகர சோழத்தரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம் அகர சோழத்தரம் 2வது வார்டில் நல்லான் குளம் உள்ளது. இதன் தென்புற கரையில் தார் சாலையின் இருபுறமும் சுமார் 21 குடியிருப்புகள் அமைந்துள்ளது. நாங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகிறோம். மேலும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெற்றுள்ளோம்.

 வீட்டு வரியும் செலுத்தி வருகிறோம். இந்த நிலையில், நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி எங்கள் குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோம். எனவே எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, எங்களுக்கு சோழத்தரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: