×

கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைக்க பைக் ரோந்து சேவை அறிமுகம்

ஊட்டி, செப். 27: கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் குற்ற செயல்களை தடுக்கவும் 4 இருசக்கர ரோந்து வாகனம் குன்னூரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதுபோன்ற சமயங்களில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் ஊட்டி நகரில் சுலபமாக சென்று போக்குவரத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த ஏப்ரல் மோதம் ‘ஹில் காப்’ என்ற பெயரில் புல்லட் ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது.

 இந்நிலையில் குன்னூர் உட்கோட்டத்திற்குட்பட்ட குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் ரோந்து பணிகள் மேற்கொள்ள வசதியாக 4 புல்லட் பைக் ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.குன்னூர் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்பி., மோகன் நவாஸ் கலந்து கொண்டு ரோந்து வாகன பயன்பாட்டை துவக்கி வைத்தார். இந்த ரோந்து வாகனங்கள் குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து மவுண்ட் பிளசனட் ரோடு வழியாக ஓட்டு பட்டறை வரையிலும், குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து டிடிகே., சாலை,  டிஎஸ்எஸ்சி., எம்ஆர்சி., வழியாக பிளாக்பிரிட்ஜ் வரையிலும் ரோந்து பணி மேற்கொள்ளப்படும். மேலும் குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து பெட்ேபார்ட், சிம்ஸ்பார்க், பெட்போர்டு, ஒய்எம்சிஏ., பிராவிடன்ஸ் கல்லூரி வழியாக வண்டிசோலை வரையிலும், கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டபெட்டு முதல் அரவேனு வரையிலும் இரு சக்கர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kotagiri ,Coonoor ,
× RELATED கோத்தகிரி சுற்றுவட்டாரங்களில் இதமான காலநிலை நிலவுகிறது