காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் ரத்ததான முகாம்

காஞ்சிபுரம், செப். 27: காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவ மையமும் இணைந்து நாட்டு நலப்பணி திட்ட  நாளை முன்னிட்டு நேற்று முன்தினம்  2 நாட்கள் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாம் நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ராமநாதன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் வரவேற்றார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் வந்திருந்து மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களிடம் இருந்து ரத்தம் சேகரித்தனர். பல்கலை கழக மாணவர்கள், ஊழியர்கள் என சுமார் 150 பேர் ரத்ததானம் செய்தனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜலட்சுமி, சரவணன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவ மைய மருத்துவர் சாய்நாதன் செய்திருந்தார்.

Related Stories: