×

வேதாரண்யம் பகுதியில் ஆறுகளில் ஆகாயத்தாமரை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம், செப்.27: வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ஆறுகளில் மண்டிகிடக்கும் ஆகாயத்தாமரை அகற்றக்கோரி வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக பதாகை ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டு கீழ வீதி, தெற்கு வீதி, மேலவீதி வடக்கு வீதி வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்து அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை எம்பி செல்வராஜ் விளக்கவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் நாராயணன் மாவட்ட நிர்வாக குழு சம்பந்தம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் பாஸ்கர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மாரியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் வேதாரண்யம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாணிக்கோட்டகம் முதல் ஆதனூர் வரை உள்ள சுமார் 25 கிலோமீட்டர் தூரம் உள்ள மானங்கொண்டாள் ஆறு, முள்ளியாறுகளில் படர்ந்து கிடக்கும் வெங்காய தாமரையால் மழை காலத்தில் தேங்க்கும் நீரை வடிய விடாமல் தடுத்தும் விவசாயம் செய்யும் நெற்பயிரை அனைத்தும் நீரில் மூழ்கச் செய்து சேதம் செய்யும் வெங்காயத்த தாமரை உடன் 100 நாள் ஆட்களை கொண்டு அகற்ற வேண்டும், ஊராட்சிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலையை மீண்டும் உடனே துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags : Agayathamar ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்