×

திட்ட நிர்வாகி பாராட்டு அரியவகை மென்பொருள் வாங்கி கைவரிசை ரயில்வே தட்கல் முன்பதிவில் ரூ.56 கோடி கொள்ளை

திருச்சி, செப்.27:அரியவகை மென்பொருள் வாங்கி ரயில்வே தட்கல் முன்பதிவில் ரூ.56 கோடி கொள்ளையடித்த பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ரயில்வே பாதுகாப்பு படைப்பிரிவில் உள்ள சைபா் பிரிவும், திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்பு படையும் இணைந்து கடந்த 18 மாதங்களாக இரயில்வே பயண சீட்டு முன்பதிவில் உள்ள தட்கல் முறையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பீகார் மாநிலஙத்தை சேர்ந்த சைலேஷ் யாதவ்(27) என்பவரை கைது செய்தர். இவர் வௌிநாடுகளில் இருந்து தட்கல் பயணசீட்டு பதிவு செய்யும் மென்பொருளை வாங்கி கடந்த சில ஆண்டுகளாக இந்தியன் ரயில்வே துறையில் சட்டத்திற்கு புறம்பாக தட்கல் டிக்கெட்டுகள் ஆன்லைன் பதிவு செய்து வந்தார். இந்நிலையில் அவரை தொடர்ந்து கண்காணித்து பீகார், பாட்னா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று 15 இடங்களில் தொடர் விசாரணையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றம் சைபா் பிரிவினர் ஈடுபட்டனா்.

நீண்ட மாதங்களுக்கு பிறகு சைலேஷ் யாதவ் என்ற வாலிபரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வௌிநாடுகளில் இருந்து தட்கல் பயண சீட்டுகளை மிக விரைவில் முன்பதிவு செய்ய மென்பொருள்களை வாங்கி அவா் பயன்படுத்தி உள்ளார். நாள் ஒன்றுக்கு சுமார் 7ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 18 மாதத்தில் 1லட்சத்து 25ஆயிரத்து 460 தட்கல் டிக்கெட்டுகள் பதிவு செய்து கொடுத்து, சுமார் 56 கோடியே 45 லட்சத்து 70ஆயிரம் ரூபாய் சட்ட விரோதமாக சம்பாதித்துள்ளார். அதேபோல் போலி ஐஆர்சிடிசி இணையதளத்தின் 3485 போலி கணக்குகளை விற்பனை செய்துள்ளார். அதோடு தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் மென்பொருள்களான ஷார்ப், பிஎம்எக்ஸ், உள்ளிட்டவைகளை சட்டவிரோதமாக பலருக்கு விற்பனை செய்து அதில் இருந்து 1 கோடி ரூபாய் பணம் சம்பாதித்ததோடு, மாதம் 3 லட்சம் கமிஷனாக பணம் பெற்றுள்ளார். சைலேஷ் யாதவ் ரயில்வே பாதுகாப்பு படையிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க தொடர்ந்து வங்கி கணக்கு, செல்போன் எண், இருப்பிடம், இணைதளம் இணைப்பு, என்று ஒவ்வொன்றையும் மாற்றி கொண்டே இருந்துள்ளதாக அவரை கண்காணித்து வந்த திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையின் சைபர் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தீவிர கண்காணிப்பானது ரயில்வே பாதுகாப்பு படையின் முதன்மை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன், திருவண்ணாமலை உதவி ஆய்வாளா் சவரிமுத்து, சைபர் பிரிவு அதிகாரி ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளின் கூட்டு முயற்சியில் சைலேஷ் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுக்குறித்து அதிகாரிகள் கூறுகையில், இது போன்று பலரை கடந்த ஆண்டுகளில் நாம் கண்காணித்து பிடித்துள்ளோம். இவரை கைது செய்த நேற்று முன்தினம் 5 பேரை கைது செய்தோம். அதில் சைலேஷ் யாதவ் தான் முக்கியமான நபர், நீண்ட கண்காணிப்பிற்கு பிறகு காத்திருந்து கைது செய்துள்ளோம் என்றனர்.

Tags : Railway Tatkal ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...