×

கறம்பக்குடியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் அபிவிருத்தி திட்டம் விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்

கறம்பக்குடி, செப். 27: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரம்பை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஆண்டு பொது குழு கூட்டம் நடைபெற்றது. கறம்பக்குடி கரம்பை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயலாளரும், கரு வட தெரு ஊராட்சி மன்ற தலைவருமான தவ பஞ்சாலன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கறம்பக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பரசன் மற்றும் கறம்பக்குடி வட்டார வேளாண்மை ஆத்மா கமிட்டி தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு துல்லிய பண்ணைய உற்பத்தியாளர் நிறுவனத்தின் திட்ட நிர்வாகியும் வேளாண்மை துறையின் முன்னாள் முதல்வருமான கண்ணன் பாபு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கறம்பக்குடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் சூசைராஜ் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

இந்த ஆண்டு அறிக்கையில் அரசு தேர்ந்தெடுத்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட 750 பங்குதாரர்களை இன்னும் 6 மாத காலத்தில் இந்த நிறுவனத்தில் இணைக்க முயற்சி நடைபெற்று வருகிறது என்றும் மேலும் கூடுதலாக பங்குதாரர்கள் இணைய உள்ளனர் என்றும் அவர்கள் இணைந்தவுடன் விவசாயிகளுக்கு இணையாக அரசிடம் இருந்தும் பங்கு தொகையை பெறலாம் என்றும் என்று கூறி எதிர்காலத்தில் இந்த நிறுவனத்தில் புதிதாக 2 இயக்குனர்களை கொண்டு வரலாம் என்றும் மேலும் குறிப்பாக இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் எதிர்கால திட்டமாக தேங்காய் மற்றும் கடலையை மதிப்பு கூட்டி கொப்பரை மற்றும் எண்ணையாக விற்பதற்கு எண்ணை செக்கு சூரிய கூடார உலர்த்தி அமைப்பதற்கு அரசு மானியத்துடன் கூடிய திட்டத்தில் அமைப்பதற்கு முயற்சிகளை இந்த கறம்பக்குடி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

என்றும் இதன் மூலம் விவசாயிகளுக்கு கடலை மற்றும் தேங்காய்க்கு மார்க்கெட் விலையை விட கூடுதல் விலையை இந்த நிறுவனம் வழங்க முடியும் என்றும் குறிப்பாக விவசாயிகளுக்கு இடு பொருட்களை குறைந்த விலையில் கிடைக்க செல்வதும் மேலும் ஆடு மாடுகளுக்கு தூய்மையான சுத்தமான தீவனங்கள் விற்பனை செய்யப்படும் என்றும் மேலும் விதை பூச்சி கொல்லி மற்றும் உரங்கள் விற்பனைக்கான உரிமங்கள் அரசிடம் இருந்து பெறப்பட உள்ளது என்றும் இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கு அணைத்து விவசாய இடு பொருட்களும் குறைந்த விலைக்கு கிடைப்பதற்கு வழி வகை செய்யப்படும் என்றும் இந்த நிறுவனத்தில் நிறுவன மேலாண்மைக்காக அரசிடம் இருந்து பெற்ற தொகை ரூபாய் 3 லட்சத்து 87,100 ஆகும் என்று கூறி ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

மேலும் திட்ட நிர்வாகி கண்ணன் பாபு பேசும் போது விவசாயிகளுக்காக அரசு தனி நிதி நிலை அறிக்கை செயல்படுத்தியுள்ளது என்றும் எனவே நிதி நிலை அறிக்கையில் துறையின் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் அபிவிருத்தி திட்டத்தில் பங்கு கொண்டு விவசாயிகள் அனைவரும் பயணடைய வேண்டும் என்றும் இதிட்டம் விவசாயிகளுக்கு கிடைத்த ஒரு வரபிரசாதம் என்று கூறி சிறப்புரை ஆற்றினார் மேலும் கூட்டத்தில் விவசாயிகளும் தங்களது கருத்துக்களை கூறினர். திட்ட அலுவலர் வடிவேல், ஜவகர் பாபு மற்றும் அலுவலர்கள் மற்றும் கறம்பக்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இறுதியாக கரம்பை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொருளாளர் திருப்பதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை சிஇஓ மோனிஷா செய்திருந்தார்.

Tags : Karambakudi Farmers Producers Organization ,Committee ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...