திருவிடைமருதூர் அருகே கபடி வீரர் மாரடைப்பால் பலி

திருவிடைமருதூர், செப்.27: திருவிடைமருதூர் அடுத்துள்ள நாச்சியார்கோவில் பாரதியார் நகரில் நேற்றுமுன்தினம் இரவு அப்பகுதி இளைஞர்கள் சார்பில் கபடி போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவர் கபடி விளையாடினார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கிருந்தவர்கள் செந்தில்குமாரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கபடி போட்டியில் விளையாடியவர் இறந்த சம்பவம் இளைஞர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: