மதுரை மத்திய சிறையில் மேலும் 3 கைதிகள் விடுதலை

மதுரை, செப். 27: தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் 113வது பிறந்த நாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை காரணமாக, தண்டனையை குறைத்து விடுதலை செய்யப்படுவது வழக்கம். அதன்படி மதுரை மத்திய சிறையில் உள்ள 22 ஆயுள் தண்டனை கைதிகள் கடந்த செப்.24ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, நேற்று மேலும் 3 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களை சிறைத்துறை டிஐஜி பழனி, கண்காணிப்பாளர் (பொறுப்பு) வசந்த கண்ணன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

Related Stories: