×

போடி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

போடி, செப். 27: போடியில் ரயில்வே ஸ் டேஷன் பகுதியில் அகல ரயில் பாதையில் தண்டவாளம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். போடியிலிருந்து மதுரை வரை 90 கிலோ மீட்டர் குறுகிய ரயில்வே சாலை 86 ஆண்டுகள் பொதுமக்களின் ரயில்வே போக்கு வரத்து சேவையாக இயக்கப்பட்டது. இதில் காலையில் மாலையிலும் இந்த ரயிலை நிலக்கரி அடுப்பு பயன்படுத்தும் இன்ஜின் மூலம் இந்த ரயிலை இழுத்து சென்று மதுரையில் சேர்க்கும். இந்த ரயில்வே சேவையை நேரம் குறைத்து பொதுமக்கள் மற்றும் ஏலக்காய் உட்பட விளைவித்து எடுக்கும் அனைத்து விவசாயப் பொருட்கள் குறைந்த செலவில் வெளி மாநிலம் என அனுப்பிடும் நலன் கருதி அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ரயில் சேவை முற்றிலும் முடக்கப்பட்டது தொடர்ந்து மாநில அரசு 25 சதவீத நிதிகள் ஒதுக்கப்படாத காரணத்தால் ஏழு ஆண்டுகள் வரை பணிகள் எதுவும் துவங்காமல் உறங்கிக் கொண்டிருந்தது.

பல்வேறு போராட்டங்களுக்கு இடையே 170 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்றது. இப்பணியின் அடிப்படையில் மதுரையில் இருந்து தேனி வரை ரயில்வே த ண்டவாளம் அமைத்து ஸ்டேஷன்கள் என சகலப்பணிகளும் செய்து சோதனை ஓ ட்டம் உட்பட தயார் நிலையில் இருந்தது. அதன்படி அண்மையில் தமிழக முதல் வர் மு க ஸ்டாலின் தலைமையில் பிர தமர் மோடி கொடியை அனைத்து ரயில் சேவையை துவக்கி வைத்தார்.தொடர்ந்து காலையில் மதுரையிலிருந்து போடி வருகின்ற ரயில் தேனி வரை வந்து மறுபடியும் மாலையில் புறப்பட்டு மதுரை சென்று பயணிகளை இறக்கி விட்டு வருகிறது. இதற்கிடையில் தேனியில் இருந்து போடி வரை 16 கிலோ மீட்டர் தூரம் அகல ரயில் பாதைக்கு தண்டவாளம் அமைப்பதற்கான சாலை பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே கொட்டகுடி ஆற்றின் குறுக்கே இருக்கும் பாலங்களும் முடிக்கப் பட்டு இடைவெளி இல்லாமல் சாலையும் இணைக்கும் பணியும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதனை எடுத்து போடி ரயில்வே ஸ்டேஷன் துவங்கி புதூர் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டருக்கு சாலைகள் விரிவாக்கம் செய்து மெட்டல் ரோடுகள் அமைத்து அதற்கு மேல் செம்மண் பரத்தி மெத்தி தயார் படுத்தபட்டுள்ளது. முதல் கட்டமாக அச்சாலையில் அகல ரயில் தண்டவாளம் அமைப்பதற்கான பணிகளுக்கு முன்னோட்டமாக ரயில்வே சம்பந்தப்பட்ட பொறியாளர் ரயில் தண்டவாள பாதையை பார்வையிட்டு அளவீடு செய்தார். மேலும் ரயில் அதிகாரிகள் ரயில்வே மேம்பாலம் வரும் பகுதிகளில் ரயில்வே ஸ்டேஷன் வரையில் தண்டவாளம் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இப்போது அகல ரயில் பாதையில் த ண்டவாளம் அமைக்கும் பணிகள் ஜருராக நடந்து வருவதால் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பயணிப் போர்கள் என பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Bodi ,
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்