×

7வது முறையாக மதுரை ரயில்வேக்கு ஆட்சி மொழி சுழற்கேடயம்

மதுரை, செப். 24: மதுரையில் இந்திய ரயில்வே, இந்திய விமான போக்குவரத்து, வருமான வரித்துறை, தபால் துறை, தொலைபேசி துறை, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற 55 மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் அலுவல் மொழி பயிற்சி அளிக்க அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளனர். நகர அலுவல் மொழி பயிற்சி அதிகாரிகள் கூட்டம் மதுரையில் ஆண்டுக்கு 2 முறை நடைபெறும். இந்த ஆண்டுக்கான நகர அலுவல் மொழி கூட்டம் நேற்று மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

 சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா முதன்மை பொது மேலாளர் சீனிவாஸ் தலைமை வகிக்க, வங்கி அதிகாரி பரசுராம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அலுவல் மொழி பயிற்சி குறித்த செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. பின்னர் சிறப்பாக செயல்பட்ட மதுரை ரயில்வே கோட்டத்திற்கு தொடர்ந்து ஏழாவது முறையாக சுழற்கேடயம் வழங்கப்பட்டது. இதனை முதுநிலை ரயில்வே பொறியாளர் நாராயணனிடம், இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் பாத்திமா வழங்கினார்.

மேலும் அலுவல் மொழி பயிற்சி செயல்பாட்டிற்காக மதுரை ரயில் நிலையமும் தொடர்ந்து 2வது முறையாக சுழற்கேடயத்தை வென்றுள்ளது. இதை நிலைய பொறுப்பு மேலாளர் லிங்கேஸ்வரன் பெற்று கொண்டார். கூட்டத்தில் ரயில்வே துறை அலுவல் மொழி பயிற்சி அதிகாரி சீனிவாசன், வருமானவரி துறை உதவி கமிஷனர் கவிதா மற்றும் மத்திய அரசு அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். அலுவல் மொழியில் “மதுலிகா” என்ற உள்சுற்று பத்திரிகையும் வெளியிடப்பட்டது.

Tags : Madurai Railway ,Railway ,
× RELATED மதுரை ரயில் நிலையம் வெளியே தாயுடன்...