×

நத்தத்தில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்: இன்று நடைபெறுகிறது

நத்தம், செப். 24: திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனையின் பேரில் ஒவ்வொரு மாவட்ட திமுக இளைஞரணியினருக்கும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநில துணை பொதுச்செயலாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி ஆலோசனையின் பேரில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் அமைச்சர் அர.சக்கரபாணி வழிகாட்டுதலின்படி நத்தத்தில் நத்தம் தொகுதி அளவில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும். இதில் திராவிட இயக்க வரலாறு தலைப்பில் மாநிலங்களவை எம்.பி. திருச்சி. சிவா, மாநில சுயாட்சி என்ற தலைப்பில் பேராசிரியர் ஜெயரஞ்சன் ஆகியோர் கருத்துரையாற்ற உள்ளனர்.

இக்கூட்டம் நடைபெறுவதற்காக நத்தத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் கேஎஸ்எஸ் காடன் இடம் தேர்வு செய்யப்பட்டு இரவும் பகலுமாக பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் இளைஞரணியினர் அமர்வதற்கும் கலந்துரையாடல் நிகழ்வுகளுக்கு கட்சியினர் அமரும் வகையிலும் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட பொருளாளரும் முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்பலம், மாநில செயற்குழு உறுப்பினர் விஜயன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, பேரூர் செயலாளர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக் குமார், பழனிச்சாமி, தர்மராஜ்,

மோகன், முன்னாள் பேரூர் செயலாளர் முத்துக்குமாரசாமி, நகர அவைத்தலைவர் சரவணன், பேரூராட்சி கவுன்சிலர் இஸ்மாயில், மாவட்ட பிரதிநிதிகள் அழகர்சாமி, அகது, சோழன், அய்யனார், வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். மேலும் இளைஞர் அணியைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரி கரசுதன், துணை அமைப்பாளர்கள் பதுருஸ்ஸமான், ஆனந்த், ஒன்றிய இளைஞரணி கலைச்செல்வன், பூசாரி, நகர இளைஞரணி இப்ரில் ஆசித் உள்ளிட்டோர் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Dravida ,Nattham ,
× RELATED திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்